அண்ணாமலையின் அற்புத பேச்சு!!? “சனாதன எதிர்ப்பும்” தனி திராவிடம் போல் வெறும் கற்பனை பாத்திரம் தான்!???

by ஆசிரியர்
Reading Mode

“சனாதன எதிர்ப்பும்”- தனி திராவிடம் போல் வெறும் கற்பனை பாத்திரம் தான்…அண்ணாமலையின் அற்புதப் பேச்சு???

மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே, மனிதன் தன் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள இயற்கையை, அவனுக்கு மேல் இருக்கும் சக்தியை நம்பினான் போற்றினான்.

ஆதி தர்மமாய் வந்த ஹிந்து வாழ்வியல் முறை,சுய ஒழுக்கத்தை போதித்ததோடு மட்டும் நின்று விடாமல்,அவன் உடலை செம்மைப்படுத்துவதற்கும், அவன் குடும்பத்தை செம்மைப்படுத்துவதற்கும், அவன் செய்தொழிலை செம்மைப்படுத்துவதற்கும்,அவன் குடும்பம் வாழையடி வாழையாக தலைதூக்க ஒரு சூத்திரத்தை வகுத்து அந்த சூத்திரப்படி தன்னுடைய வாழ்வியல் முறையை அமைப்பதற்கு உண்டான அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்தியது.

நமது நாட்டில் தோன்றிய இதிகாசங்களான ராமாயணம்,மகாபாரதம்,கந்தபுராணம்,
வேள்பாரி, போன்ற எண்ணிலடங்கா இதிகாசங்கள் நமது மனித வாழ்வியல் முறையில் தர்மத்தையே அதிகம் போதித்தது.

தமிழ் மொழி பற்றிக்கு சைவ நாயன்மார்களும், வைணவ தமிழ் பற்றிக்கு 4000 திவ்ய பிரபந்தமும், அடியார்களின் சமய தமிழ் மொழி பற்றிக்கு, அகத்தியர்,நக்கீரர், அருணகிரிநாதர்,அவ்வை போன்றவர்கள் எழுதிய நூல்களும் அடிப்படை மொழிபற்றோடு சனாதன தர்மத்தையும் எடுத்து போதித்தது.

ஒவ்வொரு குலத்தைக் காப்பதற்கும் குல தெய்வங்களும், ஒவ்வொரு ஊர் எல்லையை காப்பதற்கு எல்லை சாமிகளும், உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு, விவசாயம் செய்வதற்கு தொழில் செய்வதற்கு கால்நடை பராமரிப்பிற்கு என்று தனித்தனி சக்திகளை மனித இனம் நம்பியது. அவர்களுக்கு நன்றி செலுத்த ஒவ்வொரு பண்டிகைகளையும் உட்பகுத்தி கிராம பொருளாதாரத்து மேம்பாட்டிற்கு சம தர்மம் தலை தூக்குவதற்கு சனாதன கோட்பாடுகளை வகுத்தான்.

எடுத்துக்காட்டாக தைப்பூசத்திற்கு காவடி தூக்கும் பழக்கம் இருக்கும் வரை தமிழ் கடவுளை தங்கள் வீட்டு பிள்ளையாக தங்கள் குடும்பத்தில் ஒருவனாக உயர்த்தி பிடிக்கும் வரை சனாதன ஒழிப்பு என்பது இப்பூமியில் நடந்தேறாது.சனாதன எதிர்ப்பு, சனாதன ஒழிப்பு இதுவெல்லாம் தமிழகத்தில் நடந்தேற வாய்ப்பில்லை. ஒரு நீதிபதி தன்னுடைய வாழ்நாளில் யாருக்கும் மரண தண்டனை அளிக்கும் துர்பாக்கியத்தை எனக்கு கொடுத்து விடாதே என்று தான் வேண்டுகிறார்.

சனாதனம் என்றுமே சாகா வரம் பெற்றது.

1960 களின் தமிழகக் கதை இனி நடக்காது.ஏனென்றால் இன்றைய இளைய சமுதாயம் புதிய புரிதலோடு தங்கள் வளர்ச்சியை நோக்கி ஏங்குகின்றார்கள்.

ஏக்கத்தின் மறுபடிவம் புது விடியலாக பிறக்கட்டும்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00