பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் அரசையோ அரசு அதிகாரிகளின் தவறையோ சுட்டிக்காட்டுவது தவறல்ல: உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!
குறைகளை பேஸ்புக்கில் தெரிவிப்பது குற்றமில்லை – சுப்ரீம் கோர்ட்டு
கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர், தங்களிடம் காவல்துறையினர் தவறாக நடந்து கொண்டது தொடர்பான தகவலை பெங்களூர் டிராபிக் காவல்துறையினர் சார்பில் தொடங்கப்பட்டு இருந்த பேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்தனர். இதுதொடர்பாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கிரிமினல் நடவடிக்கை மற்றும் போலீஸ் அதிகாரியை கடமையை செய்யவிடாமல் தடுப்பது ஆகிய குற்றங்கள் அடிப்படையில் தம்பதியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து தம்பதியினர் கர்நாடக மாநிலம் ஐகோர்ட்டை நாடினார். ஆனால் கோர்ட்டு அவர்களுடைய மனுவை நிராகரித்துவிட்டது. இது முன்கூட்டி தாக்கல் செய்யப்பட்டது, விசாரணை முடிவடைவதற்கு முன்னதாகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றுகூறி ஐகோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
ஐகோர்ட்டில் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்காத நிலையில் சுப்ரீம் கோர்ட்டை நாடினர். சுப்ரீம் கோர்ட்டு அவர்கள் மீதான எப்.ஐ.ஆர்.-ஐ தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
விசாரணையின் போது, “இதுவரையில் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துகள் கவலைக்குரியது, பேஸ்புக் பொதுமன்றத்தில் உள்ள உதவிபொருள் போன்று தோன்றுகிறது. பேஸ்புக்கில் முறையிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, இந்திய தண்டனைச் சட்டம் 503-வது பிரிவின்படி குற்றவியல் மிரட்டல் தொடர்பான மூலகருத்தை ஈர்க்கமாலிருக்க செய்யலாம். குறிப்பிட்ட பேஸ்புக் பக்கம், பொதுமக்கள் தங்களது குற்றங்களை தெரிவிப்பதற்காக தொடங்கப்பட்டது. எங்களது பார்வையில், கோரிக்கை விடுத்தவர்கள் மாறுப்பட்ட விதமான நம்பிக்கையில், தங்களது கருத்துக்களை பதிவு செய்திருக்கலாம் அது குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கிறது. என்று நீதிபதிகள் வி.கோபாலா கோவ்தா மற்றும் ஆர். பானுமதி அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் கூறியது.
மாலிக் தானேஜா மற்றும் அவருடைய மனைவி சாக்ஷி ஜாவா கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி சாலைவிபத்தை சந்திக்க நேரிட்டது. இச்சம்பவத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ஒருவர் காயம் அடைந்தார். காயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் அவர்களுக்குள்ளேயே பேசி தீர்க்கப்பட்டது. இதற்கிடையே சம்பவம் நடந்தபோது அங்கிருந்த கான்ஸ்டபிள் ஒருவர், மூத்த அதிகாரியை சந்திக்குமாறு தம்பதியினருக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக அவர்களும் மூத்த அதிகாரியை சென்று சந்தித்துள்ளனர். அவர்கள் அதிகாரியை சந்தித்தபோது, அவர் இவர்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். உயர் அதிகாரி, தம்பதியினரை மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து தவறான நடத்தை தொடர்பாக பாதிக்கப்பட்ட தம்பதியினர் சம்பவம் தொடர்பான தகவல்களை பெங்களூர் டிராபிக் போலீஸ் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தனர். இ-மெயிலும் புகார் தெரிவித்துள்ளனர். என்பதை குறிப்பிடத்தக்கது.