புதுக்கோட்டை குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா, தேசியக் கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

by ஆசிரியர்
Reading Mode

புதுக்கோட்டை குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, தேசியக் கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

26/01/2026 ஆம் தேதி இன்று நாட்டின் 77-வது குடியரசு தின விழா கொண்டாட்டம் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிஷேக் குப்தா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் சமாதானத்தை குறிக்கும் வகையில் சமாதான வெள்ளை புறாக்களையும், தேசியக்கொடி வண்ணத்திலான பலூன்களையும் பறக்கவிட்டார்.

இவ்விழாவின்போது, முன்னாள் படைவீரர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் 47 பயனாளிகளுக்கு ரூ.32,11,202 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

ஊரக மேலும், காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக பணிபுரிந்த 391 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை அரசு இசைப்பள்ளி, திருக்கோகர்ணம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கந்தர்வகோட்டை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அன்னவாசல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆகிய பள்ளிகளின் சார்பில், 770 மாணவ, மாணவிகளின், வரவேற்பு நடனம், ஒருமித்த பாரத தேசம், இது எங்கள் இந்தியா, வலிமையான பாரதம், அரசுப் பள்ளிகளின் உரிமை, கல்வியின் சமத்துவம், ஆகிய பல்வேறு மையக் கருத்துகளை உள்ளடக்கிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும், சிறப்பு நிகழ்ச்சியாக, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியைச் சேர்ந்த 72 மாணவிகளின் தமிழனின் பண்பாடுகளும், பாரம்பரியமும் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன்மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.திருமால், வருவாய் கோட்டாட்சியர்கள் பா.ஐஸ்வர்யா (புதுக்கோட்டை), ப.கோகுல்சிங் (இலுப்பூர்),அபிநயா (அறந்தாங்கி), புதுக்கோட்டை வட்டாட்சியர் மு.செந்தில்நாயகி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00