இந்திய உளவுத்துறை நிறுவனமான ‘ரா’ அமைப்பு ( RAW ) உருவாக்கப்பட்ட தினம்
செப்டம்பர் 18., 1968.
இந்தியாவின் முக்கிய வெளிநாட்டு உளவு நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (Research and Analysis Wing – RAW) ஆகும். இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வெளிநாட்டு உளவு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மேலும் பயங்கரவாத எதிர்ப்பு, எதிர்ப்பு பரவல், மற்றும் வெளிநாட்டுக் கொள்கைக்கான ஆலோசனைகளை வழங்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் முதன்முதலாக இந்திய உளவுத் துறை (இன்டெலிஜென்ஸ் பீரோ) 1933-ல் உருவாக்கபட்டது.அதனைத் தொடர்ந்து, இந்தியா விடுதலை அடைந்த பின்னர் 1968-ல் உளவுத் துறையின் ஓர் அங்கமாக, வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பிரிவான ‘ரா’ (ரிசர்ச் அண்ட் அனலிஸிஸ் விங்) தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் இரண்டு கோடி ரூபாய் பட்ஜெட், 250 பணியாளர்கள் என தொடங்கப்பட்ட ‘ரா’-வின் இன்றைய ஆண்டு பட்ஜெட் சுமார் 900 கோடி ரூபாய்.அதிகாரபூர்வமாக மட்டுமே 25,000 பேர் வேலைபார்க்கிறார்கள். இவர்களில் 3,500 பேர் அந்நிய மண்ணில் பணியாற்றும் கள உளவாளிகள்.இது போல் அதிகாரபூர்வமாக இல்லாமல் எத்தனையோ பேர் வேலை செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.
ரா-வின் பணி
சில பல வெளிநாட்டு அரசுகளின் கொள்கைகளையும் கோப்புகளையும் கண்காணிப்பது.
அந்நாடுகளின் அமைச்சரவை எடுக்கும் முடிவுகளையும் கண்காணிப்பது.
இந்தியாவின் நலன்களுக்கு ஏற்ப அரசின் வியூகங்களுக்குக் களம் அமைப்பது.