வாழ்க சேதுபதி மன்னர்கள் – வளர்க சேதுபதி மன்னர் பரம்பரை !!

by ஆசிரியர்
Reading Mode

வாழ்க சேதுபதி மன்னர்கள் – வளர்க சேதுபதி மன்னர் பரம்பரை !!இராமநாதபுரம் என்பது வெறும் மாவட்டம் மட்டுமல்ல, அது தமிழர்களின் வாழ்வில் பிரிக்க முடியாத வீரம், விவேகம், நம்பிக்கை, நீதி, நேர்மை தவறாமை இவற்றின் அடையாளம்.

மாபெரும் மன்னர் ராஜா பாஸ்கர சேதுபதி இராம்நாட்

மிகைப்படுத்த வேண்டிய தேவையில்லை. வரலாற்றுச் சான்றுகள், செப்பேடுகள், ஆவணங்கள் என உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்ட வரலாற்று பயணிகளால் குறிப்பிடப்பட்ட பெருமை மிக்க பூமி அது.

அத்தகைய சீரும் சிறப்புமிக்க சமஸ்தானத்தின் தலைமைப் பொறுப்பு என்பது சாதாரணமல்ல. மதிநுட்பத்திலும், வீரத்திலும், விவேகத்திலும், அரவணைத்துச் செல்லும் ஆளுமையிலும் சிறந்தவர்களே அதை அலங்கரித்திருக்கிறார்கள்.

புனைக்கதைகள் இன்றி, வரலாற்று ரீதியாகவும் மக்கள் நம்பிக்கை ரீதியாகவும் இராமநாதபுரத்தை இந்திய வரலாற்றுப் பக்கங்களில் இருந்து எவராலும் அழித்து விட முடியாது.

சேதுபதி வழி வந்தவர்கள் தங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, பொதுவெளியில் மற்றவர்கள் பேசும் அளவிற்கு நடந்து கொள்ளக் கூடாது என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு.

அரச குடும்பத்திற்கென்று ஏற்கனவே சட்டங்களும், பழக்க வழக்கங்களும், மாண்புகளும் பட்டயங்களாக எழுதி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை யாரும் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.

அறிவுசார் பெருமக்களை கொண்டு, அனைவரும் கூடி பேசி, ஒருமித்த முடிவெடுத்து, மாட்சிமை பொருந்திய இராமநாதபுரம் சமஸ்தானத்திற்குரிய மரியாதையை நிலைநாட்டுவீர்கள் என நம்புகிறோம்.

கருத்து சொல்கிறோம் என்ற போர்வையில் உங்களுக்குள் கலகமூட்டி, உட்பிரிவு பேசி உறவை கெடுக்க நினைக்கும் கெடுமதியாளர்களின் திட்டத்தை புரிந்து செயல்படுங்கள் என்பது எங்கள் ஆலோசனை அல்ல, கோரிக்கை.

வாழ்க! வாழ்க!! இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் …. வளர்க! வளர்க !!சேதுபதி மன்னர்களின் வம்சங்கள்….

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00