ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகமும் – சொர்க்க வாழ்வை அருளும் வைகல்நாதர் ஆலயமும் !!?தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் கொம்பியல்கோதை உடனமர் வைகல்நாதர். விசாலாட்சி தாயார் உடனமர் காசி விஸ்வநாதர். பிரசன்னநாயகி உடனமர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த மூன்று சிவ ஆலயத்தில் சிவபெருமானின் நெற்றிக்கண்ணாக வைகல்நாதர் ஆலயமும், வலது கண்ணாக காசி விஸ்வநாதர் ஆலயமும், இடது கண்ணாக பிரம்மபுரீஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பாகும். இந்தப் புனித ஸ்தலங்கள் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும். கோசெங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயிலில் இதுவும் ஒன்று.பிரம்மன் பூஜித்து பாவ விமோசனம் பெற்ற ஸ்தலமாகும்.
இப்படி பல சிறப்புகளைப் பெற்ற இந்த ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் மூன்று சிவபெருமானுக்கும் அன்னாபிஷேகம் அதி விமரிசையாக நடைபெற இருக்கிறது பக்தர்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு பாவங்களைப் போக்கி சிவபெருமானின் அருளை பெற்று நீடூடி வாழ அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.
அன்னாபிஷேகம் நடைபெறும் நேரம்:-
மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
ஆலயத்திற்கு செல்ல வேண்டிய வழித்தடம்:-
கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் எஸ்.புதூரில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்திலும்,
ஆடுதுறை ரயில் நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது, வைகைநாதர் ஆலயம்.
தொடர்பு எண்:-
ஐயர் கார்த்தி.
94439 96256.