அமாவாசை திதி – ஸ்ராத்தம் 1008 வகையான காய்கறிகளுடன் செய்யவேண்டும்!இதெல்லாம் நடக்கிற கதையா!
நடக்கிறது என்று ஒரு கதை! ஒருமுறை தன் முன்னோர் ஸ்ராத்தத்துக்கு (திவஸம்) தன் குடிலுக்கு சாப்பிட வருமாறு விஸ்வாமித்ரரை வஸிஷ்டர் அழைத்தார். அதற்கென்ன வந்தால் போச்சு! ஆனால் 1008 வகை காய்கறி செய்து படைக்க வேண்டும்” என்றார். உலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா! அப்படியே இருந்தாலும் இத்தனை கறிகாய்களை சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா!
அப்படியே சமைத்துப்போட்டாலும் அதைச்சாப்பிட யாரால் முடியும்! விஸ்வாமித்திரர் தன்னை வேண்டுமென்றே ஏதோவொரு காரணத்தினால் இப்படிச்செய்கிறார் என்பது வஸிஷ்டருக்குத் தெரியாதா!
ஆஹா! 1008 வகை கறியமுது வேண்டுமா !?

பிரம்ம ரிஷி நீங்கள் நினைத்தால்
அது கண்டிப்பாக நடக்கும்!
அதற்கென்ன என் பத்தினி
அருந்ததியிடம் சொல்லி விடுகிறேன்” என்றார்.
ஸ்ராத்தச் சாப்பாடு நாளும் வந்தது. விஸ்வாமித்திரர் இலையில் அமர்ந்தார். பாகற்காய்கறி, பலாப்பழம், பிரண்டைத்துவையல் இவைகளோடு, ஒரு வாழை இலையில் எவ்வளவு காய்கறிகள் படைக்க முடியுமோ
அவ்வளவு மட்டுந்தான் இலையில் இருந்தன.1008 காய்கறிகள் இல்லை.
விஸ்வாமித்திரர் சிரிப்புடன்,
என்ன இது
முனிவரே
1008 வகை காய்கள் எங்கே? என்று வஸிஷ்டரை வினவினார்.அவரோ,இதெல்லாம் பெண் பிள்ளைகள் சமாச்சாரம்
“நான் அருந்ததியிடம் சொல்லிவிட்டேனே!
அவளையே கேட்டுக்கொள்ளுங்கள்” என்றார்.இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த உலகம் போற்றும் உத்தமி அருந்ததி முன்வந்து முனிவரை வணங்கி நின்றார்!
ஒரு ஸ்லோகத்தை கூறிவிட்டு, “இதுதானே ஸ்ராத்தகால விதி மகா ரிஷியான
உங்களுக்கு தெரிந்திருக்குமே!” என்றாள்.
அருந்ததி கூறிய அந்த ஸ்லோகம்:
காரவல்லி ஸதம் சைவ வஜ்ரவல்லி ஸதத்ரயம் பனஸம் ஷட் ஸதம்சைவ ஸ்ரார்த்தகாலே விதீயதே.
ஒரு ஸ்ராத்தத் திதியன்று சமைக்கப்படும் சமையலில், பாகற்காய்கறி 100 காய்களுக்குச்சமம்,
பிரண்டைத்துவையல் 300 காய்களுக்குச்சமம்,
பலாப்பழம் 600 காய்களுக்குச்சமம் என்று பாடல் கூறுகிறது.
ஆயிரம் காய்கள் ஆயிற்றா!
மீதி இலையில் எண்ணிப்பாருங்கள்,எட்டுகாய்கறிகள் வைத்திருக்கிறேன். ஆக மொத்தம் 1008, ” என்றாள்.சாஸ்த்திரப்படி விளக்கம் சொன்ன அருந்ததியின் பதில் கேட்டு
விஸ்வாமித்திரர் வாயடைத்துப்போனார்.
வாயை சாப்பிட
மட்டுமே திறந்தார் முனிவர்!பேசாமல் சாப்பிட்டு விட்டு வாழ்த்தி விட்டுப்போனார். ஸமயோசித புத்தியும், இல்லற தர்மமும் அறிந்தவர்களாக, பெண்கள் இருப்பதால் தான் பல ஆண்கள் வாழ்க்கை பல ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது!