5
Reading Mode
நியாயமான ஆசைகள் நிறைவேற வேண்டுமா ! சூரியனை இப்படி வழிபாடு செய்யுங்கள் !!?இந்த பரிகாரத்தை ஞாயிற்று கிழமை தொடங்கி தினமும் செய்துவர பலன் தெரிய துவங்கும்.
ஞாயிற்றுகிழமை காலை 6முதல் 7மணிக்குள் குளித்து முடித்து சூரியனை பார்த்து நின்று கீழ்கண்ட சூரிய மந்திரத்தை 9முறை கூறி பின்பு இருகைகளிலும் சுத்தமான பன்னீரை ஊற்றி உங்களின் நியாயமான கோரிக்கைகளை மனதில் நினைத்துக்கொண்டு 3முறை பன்னீரை சூரியனுக்கு வார்க்க வேண்டும்.
சூரிய மூல மந்திரம்:
“ஓம்ஹ்ரம்ஹ்ரீம்ஹ்ரௌம்ஷக் சூர்யாய_நமஹ”
இதை தொடங்கியவுடன் ஞாயிறு தோறும் யாராவது ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கி வர உங்களின் தேவைகள் நிறைவேறத் தொடங்கும்.
வீட்டில் ஒருவர் இதை செய்தாலே போதுமானது.
அன்னதானம் வழங்குவது உங்கள் வசதியை பொருத்தது.
Customize Text:
Font Color: