குழந்தைச் செல்வம் வேண்டுமா ! இந்த பெருமாளை வழிபாடு செய்யுங்கள் !!?

by ஆசிரியர்
Reading Mode

குழந்தைச் செல்வம் வேண்டுமா ! இந்த பெருமாளை வழிபாடு செய்யுங்கள் !!?குழந்தைப்; பேறு அருளும் தாமல் ஸ்ரீ தாமோதரப் பெருமாள்!
பெருமாளுக்கு வெள்ளிக் கொலுசு சாற்றும் விசேஷ பிரார்த்தனை!

காஞ்சிபுரம் அருகே அமைந்திருக்கும் 1000 ஆண்டுகள் பழமையான தாமல் ஸ்ரீ தாமோதரப் பெருமாள் திருக்கோவில், குழந்தை பாக்கியம் தரும் அதிஅற்புதப் பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது.

கொலுசு காணிக்கையின் பின்னணி & சிறப்பு: இத்தலத்தில் மூலவராக வீற்றிருக்கும் தாமோதரப் பெருமாள், ஆயர்பாடியில் குறும்பு செய்த பாலகிருஷ்ணனின் அம்சமாகவே பார்க்கப்படுகிறார். அன்னை யசோதை பிணைத்த கயிற்றின் வடு இன்றும் திருமஞ்சனத்தின் போது சுவாமியின் வயிற்றில் தெளிவாகத் தெரியும் அபூர்வத் தலம் இது.

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர், இத்தலத்திற்கு வந்து ஸ்ரீ தாமோதரப் பெருமாளையும், ஸ்ரீ திருமாலழகி தாயாரையும் மனமுருகி வேண்டிச் செல்கின்றனர்.தங்கள் வேண்டுதல் நிறைவேறி அழகான குழந்தை பாக்கியம் கிடைத்தவுடன், தம்பதியர் தங்களின் நன்றிக் கடனாகக் குழந்தை கண்ணனான தாமோதரப் பெருமாளின் திருவடிகளுக்கு ‘வெள்ளிக் கொலுசு’ சாற்றி நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

தன் திருவடிகளில் கொலுசு சத்தம் கேட்க விரும்பி, பக்தர்களின் இல்லங்களில் குழந்தைகள் நடமாடும் கொலுசு சத்தத்தை அருளும் அபூர்வப் பெருமாள் இவர்!

கோவில் தகவல்கள்:இறைவன்: ஸ்ரீ தாமோதரப் பெருமாள் தாயார்: ஸ்ரீ திருமாலழகி

அமைவிடம்: சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. (திருப்புட்குழி அருகில்). நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதியர் இத்தலத்திற்குச் சென்று தாமோதரப் பெருமாளைத் தரிசித்து, நன்மக்கட்பேறு பெறப் பிரார்த்திப்போம்!

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00