தொல்லியல் ஆய்வாளர் தவசி முத்துமாறன் காலமானார் ! தொல்லியல் துறையினர் இரங்கல் !!

by ஆசிரியர்
Reading Mode

தொல்லியல் ஆய்வாளர் த.தவசிமுத்து மாறன் காலமானார்: தொல்லியல் துறையினர் இரங்கல்!

தூத்துக்குடி மாவட்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று கல்வெட்டுகளை தேடித்தேடி ஆவணப்படுத்திய புகழ்பெற்ற தமிழ் அறிஞரும், தொல்லியல் ஆய்வாளருமான த.தவசிமுத்து மாறன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக 26/05/2026ஆம் நாள் இயற்கை எய்தினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்த த.தவசிமுத்து மாறன், அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தனது வாழ்நாளின் இறுதி வரை தீவிரத் தொல்லியல் ஆய்வாளராகவும், எழுத்தாளராகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவுக்குத் தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி விடுத்துள்ள இரங்கல் குறிப்பில்: “நமது மாவட்டத்தின் வரலாற்றுப் பாரம்பரிய உள்கட்டமைப்பை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்றதில் தவசிமுத்து மாறன் அவர்களின் பங்கு அளப்பரியது. அவரது வழிகாட்டுதலின் படிதான், பட்டினமருதூரில் வாதாபி கணபதி குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வீரக்கல்’ ஒன்றை ஆவணப்படுத்தி எனது தொல்லியல் பயணத்தைத் தொடங்கினேன்.

அதேபோல், மடத்தூர் கமலைக்கிணற்றுப் பகுதியில் கண்டறியப்பட்ட 13-ஆம் நூற்றாண்டின் கல்வெட்டை அவரோடு இணைந்து ஆவணப்படுத்திய நிகழ்வுகள் இன்றும் என் கண் முன்னே நிழலாடுகின்றன. தள்ளாமையைப் பொருட்படுத்தாமல் தமிழகத்தின் தொல்பொருட்களைத் தேடித்தேடி அலைந்த மாபெரும் தமிழ்ப்பற்றாளரை இழந்து நிற்கிறோம்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

த.தவசிமுத்து மாறனின் மறைவு குறித்துத் தூத்துக்குடி மாவட்ட வரலாற்றுப் பேராசிரியர்கள், கல்வெட்டியல் ஆய்வாளர்கள், பனை வாரிய பிரதிநிதிகள், பிராந்தியச் செய்தியாளர்கள் பாசறை மற்றும் வரலாற்றுத் துறையினர் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துள்ளனர்.

மறைந்த த.தவசிமுத்து மாறனின் இறுதிச் சடங்குகள் மற்றும் நல்லடக்க நிகழ்வுகள், 27.05.2026 (புதன்கிழமை) ஆறுமுகநேரி – மூலக்கரை செல்லும் சாலையில் அமைந்துள்ள பூவரசூர் மயான பகுதியில் நடைபெறும் என அவரது குடும்பத்தினரும், பிராந்தியத் தொல்லியல் வரலாற்று அமைப்பினரும் தெரிவித்துள்ளனர்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00