குலதெய்வத்தை ஜாதகத்தில் கண்டுபிடிப்பது எப்படி? குலதெய்வத்தை வழி படுவது எப்படி?

by ஆசிரியர்
Reading Mode

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர். குடும்பத்தில் ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே. நீங்கள் ஒருவேளை குல தெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்கலாம்.குலதெய்வத்தை எப்படி கண்டுபிடிப்பது? ஒருவருடைய ஜாதகத்தில் சில கிரகங்களின் அடிப்படையிலும், பார்வை விழும் கிரகங்களின் அடிப்படையிலும், லக்னத்தின் அடிப்படையிலும், சந்திரனின் அடிப்படையிலும் குலதெய்வம் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீடு, ஐந்தில் உள்ள கிரகம், ஐந்தாம் வீட்டை பார்வையிடும் கிரகம் ஆகியவற்றைப் பாருங்கள். அவற்றின் அடிப்படையிலேயே உங்கள் குலதெய்வம் இருந்திருக்கும்.

வெள்ளிக்கிழமையன்று வீட்டு பூஜையறையில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்து விட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றிக்கு திருநீறு இட்டுக் கொண்டு, ஒரு ஐந்து முக குத்து விளக்கு ஏற்றி, அதன் தண்டு பாகத்தில் ஒரு புதிய துணி (வஸ்திரம்) சாற்றி, பூ சாற்றி அதற்கு முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து,தூபம்,தீபம் காட்டி, ‘எங்கள் குலதெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம். ஆகவே, எங்கள் குலதெய்வத்தை நினைத்து, தங்களையே அவராகப் பாவித்து, இந்தப் படையலை சமர்ப்பிக்கின்றோம். இதனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குலதெய்வத்தைக் காட்டுவீராக’ என்று வேண்டிக்கொண்டால், இறைவனின் அருளால் குலதெய்வம் பற்றிய விவரம் உங்களுக்குத் தெரியவரும்.

உங்கள் வீட்டின் தலைவாசல் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத் துணி சாற்றி, வெற்றிலை பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலைப்படி பூஜை செய்து ‘எங்கள் குலதெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம். ஆகவே, எங்கள் குலதெய்வத்தை நினைத்து, தங்களையே அவராகப் பாவித்து, இந்தப் படையலை சமர்ப்பிக்கின்றோம். இதனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குலதெய்வத்தைக் காட்டுவீராக’ என்று வேண்டிக் கொண்டால், உங்கள் குலதெய்வம் பற்றி உங்களுக்குத் தெரியவரும்.

குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம். வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்கு செய்யவேண்டியதை செய்தால், வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிப்பர்.

விஞ்ஞான முறையில் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆண் தான். ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் மூலம் 23,தந்தை மூலம் 23 க்ரொமொசோம்கள் உள்ளன.

தாயிடம் xx க்ரோமோசோம்களும், தந்தைக்கு xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்களும் காணப்படும். அதில் x+y க்ரோமோசோம்கள் சேர்ந்தால் ஆண் குழந்தையும், இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது.

ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.

ஆனால், ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருவதால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வாழையடி வாழையாக வளர்கிறது…

எனவே இதன் முக்கியத்துவம் அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாகவும், பெண் குழந்தைகளை குல விளக்காகவும் காத்தனர்.

பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.

அதனால் ஏற்கனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடையக் கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடரக்கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது.

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குலதெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.

பிறந்த வீட்டில் ஒரு தெய்வம். புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்…

திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள், திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.
பெண்கள் திருமணமாகி விட்டால், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழா காலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

இப்படி எங்கு சென்றாலும் நம் நிழல் போல் நம்மை தொடர்ந்து நம்மை காத்து வரும் குலதெய்வத்தை மறவாமல் அனுதினமும் வழிபட்டு குலம் தழைத்து வாழ்வோமாக!

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00