ஈரோடு 28 ஆவது வார்டு., உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது.
ஈரோடு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் “உங் களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம் தொடங்கி வைக்கப்பட்டு மாவட்டந்தோறும் முகாம்கள் நடை பெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஈரோடு முனிசிபல் காலனியில் உள்ள சுப்ரமணியம் திருமண மண்டபத்தில் 28ஆவது வார்டு பொதுமக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
இந்த முகாம்களில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவை
களுடன் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு வழங்கப்பட உள்ளது.
இம்முகாமில் உடனடியாக தீர்வு கண்ட மனுக்களுக்கு ஈரோடு மாநகராட்சி இணை ஆணையர் தனலட்சுமி, இரண்டாம் மண்டல தலைவர் காட்டு சுப்பு (எ) சுப்பிரமணியம், 28ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கினர்.
இம்முகாமில் ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம்,, மாமன்ற உறுப்பினர் கள், திமுக நிர்வாகிகள், ஈரோடு மாநகராட்சி அதிகாரி கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தமுகாமில் மாநகராட்சி அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பொதுமக்களுக்கு தகுந்த இடவசதி, மனு குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் கொடுத்தனர்.