8
Reading Mode
கொண்டைக்கடலை தோசை செய்வது எப்படி??
கொண்டைக்கடலை தோசைக்கு
தேவையான பொருட்கள்??
கொண்டக்கடலை – 1 கப் (250 மி.லி) ,
பச்சரிசி – 1/2 கப் ,
வெந்தயம் – 1 தேக்கரண்டி,
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது,
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது,
தண்ணீர்,
உப்பு – 1 தேக்கரண்டி ,
சீரகம் – 1 /2 தேக்கரண்டி,
நெய்.
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் கொண்டைக்கடலையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவிடவும்.
- மற்றொரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவிடவும்.
- மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கொண்டைக்கடலை, பச்சரிசி+வெந்தயம், நறுக்கிய இஞ்சி, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து பின்பு 12 மணிநேரம் புளிக்க விடவும்.
- பிறகு மாவை கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து மாவை கரைத்து கொள்ளவும்.
- பின்பு உப்பு மற்றும் சீரகம் சேர்த்து கலந்து விடவும்.
- தோசைக்கல்லை சூடு செய்து அரைத்த மாவில் சிறிதளவு எடுத்து தோசையாக ஊற்றவும்.
- சுற்றிலும் நெய் ஊற்றி பின்பு திருப்பி விட்டு வேகவிடவும்.
- சுவையான கொண்டைக்கடலை தோசை தயார்!
Customize Text:
Font Color: