தேவையானவை :-
கோழிக்கறி – 1/4 கிலோ.
முட்டை – 2.
உப்பு – தேவையான அளவு.
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி.
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை.
மிளகு தூள் – 1 தேக்கரண்டி.
தக்காளி – 2.
வெங்காயம் – 2.
இஞ்சி,பூண்டு விழுது,பட்டை, எண்ணெய்,கடுகு, சோம்பு,
கறிவேப்பிலை – தாளிக்க
செய்யும் முறை :-
கோழிக்கறியை சுத்தம் செய்து தேவையான அளவுகளில் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.முட்டையை வேக வைத்து தோல் உரித்து முட்டை இரண்டு துண்டாகாமல் பாதி வரை வெட்டி வைக்கவும்.வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,பட்டை,சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின்னர் வெங்காயத்தையும், கறியையும் போட்டு வதக்கவும்.கறி வதங்கியதும் தக்காளி,இஞ்சி, பூண்டு விழுதைப் போடவும்.குழம்பிற்குத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள்,மிளகு தூள் சேர்த்து கொதிக்க விடவும்.குழம்பு சுண்டி வரும்போது உரித்து வைத்திருக்கும் முட்டைகளை குழம்பில் போட்டு இறக்கவும்.
சுவையான கோழிக்கறி முட்டை குழம்பு தயார்.குதூகலத்தை தரும் கோழிக்கறி முட்டை குழம்பை உண்டு மகிழ்ந்திருங்கள்.