குஸ்கா தெரியும் ! தேங்காய்ப்பால் ஒயிட் குஸ்கா தெரியுமா !! செய்வது எப்படி!!!?
இருவகையான குஸ்கா செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
சாதாரண ஒயிட் குஸ்கா.
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – 500 கிராம்
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
இஞ்சி பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி
புதினா – 1 கப்
கொத்தமல்லித்தழை – ½ கப்
தயிர் – 100 மில்லி
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 4
ஏலக்காய் – 3
பிரியாணி இலை – 2
நெய் – 3 மேசைக்கரண்டி
எண்ணெய் – 50 மில்லி
தண்ணீர் – 750 மில்லி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1.அரிசியை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
2.குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலையை தாளிக்கவும்.
3.நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
5.புதினா, கொத்தமல்லி, தயிர் சேர்த்து கிளறவும்.
6.தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
7.அரிசி சேர்த்து ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி 1 விசில் விடவும்.
8.10 நிமிடம் கழித்து திறந்து மெதுவாக கிளறி பரிமாறவும்.

தேங்காய் பால் ஒயிட் குஸ்கா.
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – 500 கிராம்
முதல் தேங்காய் பால் – 250 மில்லி
தண்ணீர் – 500 மில்லி
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 5
இஞ்சி பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி
புதினா – 1 கப்
கொத்தமல்லித்தழை – ½ கப்
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 5
ஏலக்காய் – 3
நெய் – 4 மேசைக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1.அரிசியை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
2.பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி முழு மசாலாக்களை தாளிக்கவும்.
3.வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
4.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
5.புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறவும்.
6.தேங்காய் பால், தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
7.அரிசி சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும்.
8.இறுதியில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி 10 நிமிடம் தம் போடவும்.
9.சூடாக பரிமாறவும்.
மீண்டும், மீண்டும் உன்ன தூண்டும் தேங்காய் பால் ஒயிட் குஸ்காவை சுவைத்து மகிழுங்கள்.